காரைக்குடி, ஜூலை 10: காரைக்குடியில் டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கலைக்கல்லூரியின் 12வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் ஹேமாமாலினி வரவேற்றார். கல்லூரி தலைவர் டாக்டர் ராமநாதன் வைரவன் தலைமை வகித்தார். அழகப்பா கல்விகுழும அறங்காவலர் தேவி அலமேலு வாழ்த்துரை வழங்கினார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி னார். விழாவில் 2017, 2018, 2019ம் கல்வியாண்டை சேர்ந்த 1,623 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. அழகுவைரவன், நரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1,623 மாணவிகளுக்கு பட்டம் வழங்கல்
previous post