Thursday, May 16, 2024
Home » மானாமதுரையில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

மானாமதுரையில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

by Ranjith

மானாமதுரை, செப்.12: பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரன் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு சென்ற இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பரமக்குடியில் நேற்று இமானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். மானாமதுரை வழியாக பரமக்குடி சென்ற அவருக்கு மானாமதுரையில் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் திமுகவினர் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாமணி, நகர செயலாளர் பொன்னுச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, மானாமதுரை நகராட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி, துணை தலைவர் பாலசுந்தரம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முத்துச்சாமி, நகர் அவைத்தலைவர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள், நகராட்சி வார்டு கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

8 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi