சாத்தான்குளம், மார்ச் 29: புத்தன்தருவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 2021-22ம் ஆண்டுக்கான நிகர லாபத் தொகையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி தொகை ₹9039, கூட்டுறவு கல்வி நிதி தொகை ₹6026 என மொத்தம் ₹15065க்கான காசோலையை சங்கத்தின் செயலாளர் அருள்தாஸ், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் சாம் டேனியல் ராஜிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கணக்காளர் யோசேப் கலந்து கொண்டார்.