சென்னை: பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் தலைமை நிலைய அலுவலகச் செயலர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்தவர் கு.க.செல்வம். இவர் கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் பாஜவில் இணைந்த அவருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. ஆனாலும் சில காலம் கட்சியிலிருந்து ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் நே.சிற்றரசு, சட்டத்துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை உட்பட பலர் கலந்து கொண்டனர்….
பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் மீண்டும் திமுகவில் இணைந்தார்
previous post