Saturday, May 18, 2024
Home » நெமிலி அருகே விபரீதம் யு டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்: குழந்தை இறந்ததால் பரபரப்பு

நெமிலி அருகே விபரீதம் யு டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்: குழந்தை இறந்ததால் பரபரப்பு

by kannappan

நெமிலி: யு டியூப் பார்த்து மனைவிக்கு கணவன் பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. ஆபத்தான நிலையில் மனைவி வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த நெடும்புலி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன்(34). இவர் டிப்ளமோ படித்துவிட்டு வீட்டிலேயே மரச்செக்கு வைத்து எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கோமதி(28). இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியான கோமதிக்கு மருத்துவ சோதனையில் கடந்த 13ம் தேதி பிரசவத்துக்கான நாள் குறிக்கப்பட்டதாம். ஆனால் அன்றைய தினம் அவருக்கு பிரசவ வலி ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லோகநாதன், அக்காள் கீதா உதவியுடன் யு டியூப் சேனலை பார்த்து பிரசவம்  பார்த்துள்ளார். இதில் ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. அத்துடன் கோமதிக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதில் உடல்நிலை கவலைக்கிடமானது. உடனடியாக மனைவியையும், இறந்த குழந்தையையும் அருகில் உள்ள புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.  அங்கு அவர்கள் கோமதிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, உடனடியாக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையையும் அங்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் கோமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மோகன் புகாரின்படி நெமிலி போலீசார் வழக்குப்பதிந்து யு டியூப் மூலம் பிரசவம் பார்த்த லோகநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்….

You may also like

Leave a Comment

5 + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi