Saturday, May 18, 2024
Home » நெசவுத் தொழில்நுட்ப பயிலகத்தின் 2021-22ம் ஆண்டுக்கான டிப்ளமோ படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

நெசவுத் தொழில்நுட்ப பயிலகத்தின் 2021-22ம் ஆண்டுக்கான டிப்ளமோ படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

by kannappan

சென்னை:  தமிழக அரசின் நெசவுத் தொழில் நுட்ப பயிலகத்தின் 2021-22ம் ஆண்டுக்கான டிப்ளமோ படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தரமணி, நெசவு தொழில்நுட்ப பயிலகம் முதல்வர் அமராவதி அறிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை, தரமணியில் உள்ள நெசவுத் தொழில் நுட்பக் கல்லூரியில் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கான முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கைகான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 12.07.2021 ஆகும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இணையதளமாகவோ https://www.tngptc.in, https://www.tngpt.com அல்லது TPAFC-06 மையமாக விளங்கும் நெசவுத் தொழில் நுட்ப பயிலகம் தரமணி சென்னை-113 அணுகவும்.  மேலும் கல்விக்கட்டணம் ரூ.2 ஆயிரம், 100 சதவீதம் வேலைவாய்ப்பு, அரசு உதவி தொகை வழங்கப்படும். இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

10 − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi