Saturday, May 18, 2024
Home » ஜப்பானில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண்

ஜப்பானில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண்

by kannappan

டோக்கியோ: ஆர்ஆர்ஆர் படம் ஜப்பானில் வெளியாவதையொட்டி அப்பட ஹீரோக்கள் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் அங்கு சென்றுள்ளனர். ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படம் வெளியானது. இதில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்திருந்தனர். இந்த படம் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் வசூலித்தது. சில நாடுகளில் இந்த படம் வெளியாகவில்லை. இந்நிலையில் அந்த நாடுகளில் இப்போது திரையிடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த படம் ஜப்பானில் திரைக்கு வர உள்ளது. இதற்கான சிறப்புக் காட்சி டோக்கியோவில் திரையிடப்பட்டது. இதில் செய்தியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த சிறப்புக்காட்சிக்கு ஜூனியர் என்டிஆர் தனது குடும்பத்துடன் ஜப்பான் வந்தார். ராஜமவுலி, ராம்சரண் ஆகியோரும் ஜப்பானுக்கு வந்திருந்தனர். ‘சமீபத்தில் கிரீன்லாந்தில் படத்தை திரையிட்டோம். இப்போது ஜப்பானுக்கு வந்திருக்கிறோம். ஓடிடி மூலம் ஏற்கனவே இந்த படம் உலகளாவிய கவனத்தை பெற்றிருக்கிறது. ரசிகர்கள் பலரும் தங்களது நாட்டில் திரையிட கேட்பதால் படம் வெளியாகாத சில நாடுகளில் ரிலீஸ் செய்கிறோம்’ என ராஜமவுலி கூறினார்….

You may also like

Leave a Comment

1 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi