செங்கோட்டை, ஏப்.14:செங்கோட்டை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சட்ட இயக்க தினத்ைத முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் செங்கோட்டையில் நடைபெற்றது. இதில் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுனில் ராஜா கலந்து கொண்டு அரசின் சட்ட உதவிகள் பற்றி எடுத்துரைத்தார். இன்ஸ்டியூட் முதல்வர் வரவேற்றார். முகாமில் அரசு வழக்கறிஞர் சுரேஷ், வழக்கறிஞர் கார்த்திகைராஜன், ரேஷ்மா ஆசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சட்ட பணிகள்குழு உதவி மைய நிர்வாகி ஜெயராமன் செய்திருந்தார்.
சட்ட விழிப்புணர்வு முகாம்
previous post