பெங்களூருவிலிருந்து 8ம் தேதி சசிகலா தமிழகம் வருகிறார். அவரது ஆதரவாளர்கள். போஸ்டர்களும், பேனர்களும் வைத்து வரவேற்க தயாராகி வருகின்றனர். திருவொற்றியூரில் சசிகலாவுக்கு 35 அடி உயரத்தில் பிரமாண்ட எல்இடி கட்அவுட் அமைக்கப்பட்டுள்ளது. தேரடி சந்திப்பில் உள்ள இந்த கட்அவுட்டின் கீழே தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக என்றும் டிடிவி தினகரன் பெயரும் உள்ளன. அமமுக கிழக்குப் பகுதி செயலாளர் ராமன் இந்த கட்அவுட்டை வைத்துள்ளார்….