சென்னை: விக்கிரவாண்டியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை குறிக்கோளாகக் கொண்டு அதிமுக செயல்படும் என அதிமுக நிர்வாகிகளுடன் உடனான ஆலோசனைக்கு பிறகு பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவது குறித்தான ஆலோசனையில் மூத்த நிர்வாகிகளுடன் ஈடுபட்டிருந்தார். அந்த ஆலோசனைக்கு பிறகாக அதிமுக தலைமை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக 3 பக்கம் உள்ள புறக்கணிப்புக்கான அறிக்கையில் பல்வேறு பல்வேறு விசியங்களை எடப்பாடி பழனிசாமி முன்னிருத்தி காட்டியுள்ளார். அதிலும் குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி ஃபார்முலா மற்றும் திருமங்கலம் ஃபார்முலா என பல்வேறு இடைத்தேர்தல் குறித்து குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி அதனை முன்னிருத்தியே விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதன் காரணமாகவே விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இனிவரக்கூடிய 2026-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் களம் காணும், அதற்கான தேர்தல் முன்னேடுப்புகளை நடத்த வேண்டும் என பழனிசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.