கடையநல்லூர், டிச.24: கடையநல்லூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் தியாகி கக்கன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மணிக்கூண்டு முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கணேசன் தலைமை வகித்தார். திமுக முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், விடுதலை சிறுத்தை கட்சி தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தாமஸ், நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், விசிக வடக்கு மாவட்ட செயலாளர் லிங்கவளவன், தெற்கு மாவட்ட செயலாளர் பண்பொழி செல்வம், மண்டல துணைச் செயலாளர் சித்திக்,
மாவட்ட செய்தி தொடர்பாளர் இசக்கிப்பாண்டியன், நகரச் செயலாளர் பாக்கியநாதன், கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் நெடுவை மூர்த்தி, செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ், திமுக மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பெருமாள் துரை, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் முகையதீன் கனி, திரிகூடபுரம் பஞ்சாயத்து துணை தலைவர் செய்யது மீரான், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பால்சாமி, லட்சுமணன், விசிக நிர்வாகிகள் முருகையா, பீமாராஜு, விவேக், டேனியல், கண்ணன், சாமிதுரை பொதிகைவளவன், குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.