Thursday, May 16, 2024
Home » ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிகபட்ச தொகை.. இந்திய வீரர் இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிகபட்ச தொகை.. இந்திய வீரர் இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்

by kannappan

பெங்களூரு: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 2022 ஐபிஎல் மெகா ஏலம் பெங்களுருவில் தொடங்கியது. உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன், மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது.* ஐபிஎல் ஏலத்தில் முதல் வீரராக ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.*தமிழக வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ. 5 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.*ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 7.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.*தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவை ரூ. 9.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. *நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ரூ. 8 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.*இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் ரூ.12.25 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா அணி.* இந்திய அணி வீரர் முகமது ஷமியை ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.*தென்னாப்பிரிக்க அணி வீரர் ஃபாஃப் டூ ப்ளசிஸை ரூ.7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்*தென்னாப்பிரிக்க அணி வீரர் குவிண்டன் டி காக் ரூ.6.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்*ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி அணி.*மேற்கு இந்திய திவுகள் அணி வீரர் ஷிம்ரன் ஹெட்மயரை ரூ.8.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்*இந்திய வீரர் ராபின் உத்தப்பாவை ரூ.2 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி*இந்திய வீரர் மணீஷ் பாண்டேவை ரூ.4.60 கோடிக்கு வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி*மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டரை ரூ.8.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்*இங்கிலாந்து வீரர் ஜேசன் ராயை ரூ.2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.*இந்திய அணி வீரர் நிதிஷ் ராணாவை ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்*மேற்கு  இந்திய தீவுகள் அணி வீரர் டுவெய்ன் ப்ராவோவை ரூ.4.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்*இந்திய அணி வீரர் தேவ்தத் படிக்கலை ரூ.7.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் கிங்ஸ்*நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலம் வாங்க முன் வராததால் ஏமாற்றம்; சிஎஸ்கே ரசிகர்கள் சோகம்!*இந்திய வீரர் ஹர்ஷல் படேல்-ஐ, ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!*ஐபிஎல் மெகா ஏலத்தில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனை எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை!*ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை வாங்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை! (UNSOLD)*இந்திய வீரர் தீபக் ஹூடாவை ரூ.5.75 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்! *ஐபிஎல் மெகா ஏலத்தில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவை ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது RCB அணி! *ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தரை, ரூ.8.75 கோடிக்கு ஏலம் எடுத்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி! *ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் க்ருனால் பாண்டியாவை, ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி! *ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபியை எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை! (UNSOLD) *ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ், ரூ.6.50 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ் அணி! *ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் அம்பத்தி ராயுடுவை ரூ. 6.75 கோடிக்கு ஏலம் எடுத்தது CSK அணி*ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ வேடை எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை! (UNSOLD) *ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் இஷான் கிஷன், ரூ.15.25 கோடிக்கு ஏலம் எடுத்தது  மும்பை இந்தியன்ஸ் அணி!*ஐபிஎல் மெகா ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ, ரூ.6.75 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி! *ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரித்திமான் சாஹாவை எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை! (UNSOLD)*ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், ரூ.5.50 கோடிக்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!*ஐபிஎல் மெகா ஏலத்தில் இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை! (UNSOLD)*ஐபிஎல் மெகா ஏலத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன், ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி!*இந்திய அணி வீரர் நடராஜன் ரூ. 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்*ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணி வீரர் தீபக் சஹார், ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!*ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் உமேஷ் யாதவ் எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை! (UNSOLD)*ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணி வீரர் பிரசித் கிருஷ்ணா, ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!*ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஜோஸ் ஹேசல்வுட், ரூ.7.75 கோடிக்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!*ஐபிஎல் மெகா ஏலத்தில் நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன்,  ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ்! …

You may also like

Leave a Comment

twelve − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi