Saturday, May 18, 2024
Home » எம்மி விருது: சிறந்த நிகழ்ச்சி வர்ணனையாளராக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தேர்வு..!!

எம்மி விருது: சிறந்த நிகழ்ச்சி வர்ணனையாளராக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தேர்வு..!!

by kannappan

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிற்கு சிறந்த நிகழ்ச்சி வர்ணனையாளருக்கான எம்மி விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஒபாமாவும் அவரது மனைவி மிச்செலும் ஹையர் கிரவுண்ட் என்ற பெயரில் இணையத்தொடர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்களது நிறுவனம் ‘ our Great National Parks ‘ என்ற தலைப்பில் ஆவண படத்தை தயாரித்திருந்தது. இதில் உலகம் முழுவதும் உள்ள தேசிய பூங்காக்களின் சிறப்பு அம்சங்கள் எடுத்துரைக்கபட்டன. 5 பாகங்கள் கொண்ட இந்த தொடரை பராக் ஒபாமாவே தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற ‘எம்மி’ விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த ஆவண பட வர்ணனையாளர் விருது ஒபாமாவிற்கு வழங்கப்பட்டது. ‘எம்மி’ விருது பெறும் இரண்டாவது அமெரிக்க அதிபர் ஒபாமா ஆவார். அமெரிக்க முன்னாள் அதிபர் டுவைட் டி. ஐசனோவர்ஸ் 1956ம் ஆண்டு சிறப்பு வர்ணனையாளருக்கான எம்மி விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. …

You may also like

Leave a Comment

19 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi