திருமலை: ஆந்திர மாநிலத்தில் கடந்த 13ம் தேதி சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்கள் ஒரேகட்டமாக நடந்த முடிந்தன. வாக்குப்பதிவின் போதும் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. தேர்தலுக்கு பிறகும், பல இடங்களில் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம், உண்டவல்லியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் வீடு, கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து சந்திரபாபு வீடு வரை செல்லும் வழித்தடங்கள் உள்ளிட்ட இடங்களில் மத்திய அரசின் தலைமை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதைதொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தலா 12 கமாண்டோக்கள் கொண்ட இரண்டு பிரிவுகள் சந்திரபாபு நாயுடு பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடுவுக்கு ஒன்றிய அரசு பாதுகாப்பு அதிகரிப்பு
89
previous post