Thursday, May 16, 2024
Home » ஆன்மிக அமுதத் துளி-5

ஆன்மிக அமுதத் துளி-5

by kannappan
Published: Last Updated on

வில்வத்தின் உள்ளேயும், துளசியின் நறுமணத்திலும் சிவனும் ஹரி உள்ளீடாக மறைந்து நம்மைக் காத்துவருகின்றனர். பக்தியின் அடுத்த நகர்வு ஆன்மிகம் நோக்கியதாக மலர்கிறது. இதனை நமக்குக் காட்டிய அருளாளர்கள் ஸ்லோகங்களாகவும், பதிகங்களாகவும், பாசுரங்களாகவும் காட்டியுள்ளனர். மனிதநேயத்தின் உச்சமாக ஆண்டாள் பிராட்டி “ஐயமும், பிச்சையும் ஆதனையும் கைகாட்டி” என்று கூறுவதன் மூலமாகத் தான தர்மத்தை விளக்கிவிடுகிறாள். சிதம்பரச் செய்யுட் கோவையில் “குமர குருபரர்” சிவபெருமானது பெருமையையும், என்ன தருவான்? இறைவன் என்பது காட்டுகின்றார்.சொல்லும் பொருளும்:-நீக்கமற நிறைந்திருக்கின்ற இறைவனை மனிதனால் எப்படிக் காண முடியும்? கோயில் கருவறையில் இருக்கும் இறைத் திருமேனி சிலையில் மட்டும்தான் காணமுடியுமா? சில சமயங்களில் நல்ல சொற்களும் பணிவான அன்பிலமைந்த வார்த்தைகளும் சொல்கின்றவர்களால் ஏன் அவ்வாறே தொடர்ந்து இருப்பதற்கு இயலுவதில்லை? சொற்களே வராத சலனமற்ற மனநிலை வந்து விடுவது ஏன்? இப்படிப் பல்வேறு கேள்விகள் தொக்கி  நிற்கவே செய்கிறது. எல்லாக் கேள்விகளுக்கு பதில் குமரகுருபரர் சொல்கின்றார். சிலையாக நின்று உருவம் காட்டுகின்ற இறைவன் பின் அதனை விட்டு அகன்று அருவமும் ஆக உருவமற்று நின்று தன்னைக் காட்டுகின்றான். இன்னமும் ஒரு படி மேலே போய் அருவம், உருவம் எதுவும் இல்லாமல் அகன்று பிரபஞ்சமாகி விடுகின்றான். வாய் வழி வரும் சொல்லாக இருந்து பின் அதன் பொருளாகவும் தெரிகின்றான். சொல்லுக்கான பொருளுமில்லாமல் போக்கும் காட்டுகின்றான். மனிதர்களின் சொற்கள் பொருளில்லாமல் அர்த்தம் ஆவது ஏன் எனில் பக்தி இல்லாதபோது இறைவன் தான் இருக்கிறே என்பதை உணர்த்தவே இந்த ஏற்பாடு. இதனைப் புரிந்து கொண்டால் நலமே திகழும். இனி அப்பாடலைப் பார்க்கலாம். அருவமும் உருவமும் ஆகி நின்று அந்த அருவமும் உருவமும் அகன்று நின்றனை.சொல்லொரு பொருளுமாய்த் தோன்றி நின்று அச் ெசால்லையும் பொருளையும் துறந்து நின்றனை.இதனையே குரு கீதை அத்தியாயம் நான்கில் 189 வது ஸ்லோகம் இப்படிச் சொல்கிறது. பரபிரம்மத்தை புலன்களால் அறியவும் முடியாது, அடையவும் முடியாது. ஒலி இல்லாதது. நாம ரூபங்கள் இல்லாதது. இப்பொருளை தத்துவார்த்தமாகப் புரிந்து கொண்ட குமர குருபரர் உண்மையான இறையுணர்வை உணர்ந்துகொள். எளிய வடிவால் இதனைத் தந்துள்ளார்.மெய்ந் நலம் விழைந்திடல் நலம்:-எப்போது மனிதனுக்கு மனக் கவலைகள் அதிகமாகும் எனில் எதிர்பார்ப்புகள் அதிகமாகும் பொழுதுதான். பொன் வேண்டும், பொருள் வேண்டும் என்று வேண்டுதல் வைத்து இறைவனை கிடுக்கிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு கேட்க அவனும் தந்துவிடுகிறான். ஆயினும் அது கிடைத்த பிறகுதான் சங்கடங்கள் அதிகமாகிவிடுகின்றன. பொன்னும் பொருளும் கொண்டு பிறர்க்கு அற வழியில் நின்று உதவி செய்ய வேண்டும் என நினைப்பவர் அறக்கடவுளாக மாறுகின்றார். அறக்கடவுள் துணைநின்றால் இல்லறமும் நல்லதாகவே மாறிவிடுகிறது. இதுவே வீடு பேறாக பேரின்பமான இறைவனுடன் கலப்பதற்கும் துணை நிற்கின்றது. ஆக அறத்தின்வழி நிற்றலே இறைவனுடன் கலத்தலுக்கான வழி ஆக பாடலைப் பார்ப்போம்.அந்நலம் விழைந்தவர்க்கு அறமும் ஆயினைபொன்னலம் விழைந்தவர்க்கு பொருளும் ஆயினைஇன்னலம் விழைந்தவர்க்கு இன்பும் ஆயினைமெய்ந்நலம் விழைந்தவர்க்கு விடும் ஆயினைநமது நோக்கம் எல்லாம் இறைவனுடன் கலப்பதாகத்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறத்தின் வழி நிற்போமாயின் இது எளிதாகும். கடலில் கலக்கும் நீரும், பாலில் பாலும், நீரில் நீர் உடைந்த பானையில் உள்ள ஆகாயம் அதன் வெளியே உள்ள மகா ஆகாயத்தில் எப்படி ஐக்கியம் ஆகுமோ. அது போல இந்த ஜீவனும் பரமாத்மாவில் கலந்தாகிவிடும். இது குருகீதை நமக்குப் போதிக்கிறது. இந்த சூட்சுமப் பொருளை குமரகுருபரர் எளிதான பாடல் மூலம் நமக்கு விளக்குகின்றார்.பேரதிசயப் பெருமாள்:-தன்னை விட ஆற்றல் மிகுந்த ஒருவனை மனிதர்கள் மதிப்பு மரியாதையும் காட்டுவதிலும் புகழ்வதிலும் மகிழ்கின்றனர். ஆயினும் அன்றைய ஞானிகளின் பாடல்கள் தனக்கு உவமை இல்லாத இறைவனை மட்டுமே பாடுவதாகக் கொண்டனர். அதுவே காலத்தால் போற்றத்தக்கதாகவும் வணங்கத்தக்கதாகவும் உள்ளது. இறைவன் பெருமைகளைச் சொன்னாலே போதும் நமக்கு என்ன வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வான் இறைவன் என்பது இவர்கள் வாக்கு. குமரகுருபரர் இறைவன் சிவபெருமான் புகழைப் பாடுவதில் சற்றும்கூட குறையாமல் பாடுகின்றார். என்ன வேண்டும் என்று கேட்பதற்கு முன் சிவபிரான் என்ன வெல்லாம் செய்தான் என்பதனை வெகு விமர்சையாகப் பாடுகின்றார்.மேருமலையை வில்லாக வளைத்தாய்: பார்வதி மூன்று தனங்களுடன் பிறந்தாள். சிவபிரானைப் பார்த்தவுடன் மலையரசன் மகளான அவளது தனம் ஒன்று மறைந்தது. பாற்கடல் கடைந்த போது அமிர்தத்துக்கு முன்பு வந்த விடத்தை (விஷத்தை) உண்டு அமிர்தத்தைத் தந்தார். அர்ச்சுனனுடன் போர் செய்து தோற்றதுபோல் தோற்று அவனை இரட்சித்து “பாசுபதாசுரம்’’ தந்ததும் நீதானே, மன்மதனை உன் நெற்றிக்கண்ணால் எரித்தாய்; மதம் பிடித்த யானையின் தோலை உரித்தாய்; வேதங்களை இந்த உலகுக்குத் தெரியும்படி உனது சீடர்களுக்கு தட்சிணாமூர்த்தி குருவாக இருந்து சொன்னாய்; சுடர் ஒளியால் தேவையற்றதை எரிக்கவும் செய்கின்றாய், உன் சடைமுடியால் சந்திரனைக்கொண்டு ஒளியும் தரவே செய்கின்றாய். இப்படிப் புகழ்ந்த சிவபிரானது உள்ளம் குளிராது என் செய்யும்? பாடலைப் பார்க்கவடவரை குழைய வளைத்தனைமலைமகள் முலைகள் இளைத்தனைவிடம் அமிர்தா விளைத்தனைவிசயனொடு அமர் செய்து இளைத்தனைவரிசிலை வதனை எரித்தனைமததரி உரிவை தரித்தனைஅருமறை ெதரிய விரித்தனை இப்படி காசிக் கலம்பகத்தில் பாடுகின்றார்.குணங்களில் மேன்மையோன்:-மேற்கூறியவாறு புகழ்ந்து பாடிவிட்டாலும்  இன்னமும்கூட இறைவனது குணங்களைச் சொல்லாமல்விட்ேடனோ என்று அடுத்த பாடலி லேயே உருக்கமாகச் சொல்கின்றார். தீயது வரின் நெற்றிக்கண் திறப்பதும், பிறப்பு ஒழிப் பதும், கங்கையை தடுத்து ஆட்கொண்டதும். பஞ்சபூதங்களிலும், பஞ்சபூதங்களால் ஆன இந்த உடலுக்குள்ளும் சூட்சும நடனம் புரிபவன் நீதானே! அஞ்ஞான இருளை அகற்றி அருள் தருவதும் எம்பிரானே நீதான்! நான் பாட தமிழுமாக நீதானே ஆகி நிற்கின்றாய். உமையவளை இட பாகம் வைத்திருக்கின்றாய் என்பதனையும், இடக்கரத்திலே மானை வைத்திருப்பதையும் சேர்த்துச் சொல்லும்படியாக “மானிடத்தினை” என்பது குமரகுருபரின் அழகு நடையாகும். இனிப்பாடல் பார்ப்போம்.அழல்விழித்தனை    பவம் ஒழித்தனைஆறணிந்தனை     மாறணிந்தனைமழுவலத்தினை     முழுநலத்தினைமாநடத்தினை     மானிடத்தினைஅலகிறந்தனை     தலைசிறந்தனைஅருள் சுரந்தனை     இருள் துறந்தனைஉலகளித்தனை     தமிழ் தெளித்தனைஒன்று மாயினை     பலவுமாயினைகாசிக்கலம்பகத்தின் இந்த இரண்டு பாடல்களுமே சிவபெருமானது மிக நீண்ட வரலாற்றினைக் கூறுவதோடு எளிய நடையில் அமைந்தும் உள்ளது. வரலாற்றினைக் கூறுவதோடு எளிய நடையில் அமைந்தும் உள்ளது. மனதில் உருகி நாவால் உச்சரித்தால் இறைவனின் சூட்சும கருணை கிடைத்து விடும் என்பது குருபரின் சத்தியவாக்கு. உயிர்களின் பிறப்பும், இறப்பும், சரணாகதியும் அவனது நடனத்திலல்லவா இருக்கிறது. பரஞ்சுடரான பரமசிவனை நாவிலே காய்ப்பு காய்க்கும் அளவு பாட வேண்டும். நமசிவாய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதனையும் சொல்கின்றார்.முழுமையான நலம் கொடுக்கும் சிவபிரானின் நாமம் அந்த முழுமையான நலம் எது? எதற்காக இத்தனை கட்டியம் கூறுகிறது என்கின்ற சிறு சந்தேகம் அல்லது அறியாமை உள்ளத்தே எட்டிப்பார்க்கும் அதற்கான விளக்கமும் அவரே கூறுகின்றார்.குழைவும்  இறைஞ்சலும் எதற்கு?ஓம் என்கின்ற பிரணவ மந்திரமே நாதத்தின் அடிப்படை. எல்லாவித வித்ைதகளுக்கும், ஏகப்பொருளுக்கும், உயிர்க்கும் ஒட்டுமொத்தமாக பரப்பிரம்மமே இம்மந்திரம்தான். சிவபிரானின் சொரூபமும் அதுதான். சிவபிரானை தியானித்து பிரணவத்தை உச்சரிக்கும்பொழுது முழுமையான நலமாகிய பேரின்பமாகிய இறைவனின் அனுக்கிரகாத்தாலமைந்த வீடுபேறு கிட்டும். ஆகவே நாதத்தழும்பு ஏற உச்சாியுங்கள் என்கிறார் குமரகுருபரர் காசிக்கலம்பகத்தில். அவரது பாடல்களை நாம் இசைத்தாேல வீடு பேறு கிட்டும்.முழுநலம் கொடுக்கும் செந்நெறி பரஞ்சுடரைஇன்னிசைப் பாத்தொடுத்து பரஞ்சுடரைநாத்தழும்பு இருக்க ஏத்துமினீரேமற்றுமொரு சிதம்பரச் செய்யுட்கோவை பாடலில் எப்படிப் பாடினார். இந்த அழுக்கு நிறைந்த உடலை விட்டு இறைவன் நிழலில் அழியாத  தன்மையோடு முக்தி அடைய முடியும் என்று சூத்திரம் தருகின்றார். “நான் செய்த பாவங்கள் நீக்கி என்னைக் கரையேற்று” என உள்ளபடியே சத்தியத்தின் ஆற்றலோடு குழைந்து உருகி, அவன் பாதத்தில் சரணாகதி என்று “நான்” உணர்வை விட்டு முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டால் மட்டுமே வீடுபேறு பெறலாம். அதற்காகவே இந்த மனிதப்பிறவி பிறப்பெடுத்து இருக்கிறது. அதுவே கடைசி இலக்கு ஆகும் என்கிறார். நெஞ்சகங் குழைந்து நெக்கு நெக்கு உருக நின்குஞ்சித சரணம் அஞ்சலித்து இறைஞ்சுதும்மும்மலம் பொதிந்த முழுமலக் குரம்பையில் செம்மாந்திருப்பது தீர்ந்துமெய்ம்மையிற் பொலிந்த வீடு பெறற்பொருட்டேஆக ஆணவம், கன்மம், மாயை என்கின்ற மும்மலங்களால் ஆன இந்த உடலை …  அழுக்கு நீக்கி அழகு செய்யும் கருவிகள் இறைவனின் திருநாமம். இதை உணர்ந்து பயணித்தலே ஆன்மிகத்தின் நோக்கமாகும்.(தொடரும்)மகேஸ்வரி சற்குரு…

You may also like

Leave a Comment

seventeen + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi