சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவு:
குலையா உறுதி, அசையாக் கொள்கை, தாழா மானம், மங்கா உணர்வு, மாறா நட்பு, மறையாப் புகழ் என இனி வரும் இயக்கத்து இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த இனமானப் பேராசிரியர் நினைவுநாள். கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. காலம் முதல் பொதுக்குழுவில் என்னை தலைவராக அறிவித்தது வரை என் வாழ்வில் அவர் நிறைந்திருக்கிறார். என் நெஞ்சில் என்றும் நீங்காதிருப்பார். அவர்தம் கொள்கைப் பெருவாழ்வு நம்மை வழிநடத்தும்.