துருக்கி: உடல் எடை குறைப்பு சிகிச்சை, எதிர்பாராத விதமாக இளம்பெண்ணின் உயிரை பறித்தது. ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் ஷானன் போவ் (28). இவர் தனது உடல் எடையை குறைப்பதற்காக துருக்கியில் சிகிச்சை மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக இரைப்பை பேண்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிகிச்சை என்பது வயிற்றின் அளவை குறைக்க ஒரு பேண்ட் பயன்படுத்தப்படும் ஒரு செயல்முறை. இது, உணவு உட்கொள்ளும் அளவை குறைக்க வயிற்றின் மேல் பகுதியில் பேண்ட் வைக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த அறுவை சிகிச்சையின்போது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மரணத்தை வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலக செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார். மேலும், போவின் காதலன், ரோஸ் ஸ்டிர்லிங், தனது காதலிக்கு பேஸ்புக்கில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதில் “என் தேவதையே நீ தூங்கு.. என்றென்றும் உன்னை நேசிக்கிறேன்,” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.