காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், இன்று, நாளை மற்றும் 18, 19ம் தேதி ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில், புதியதாக பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.