புதுடெல்லி: பாரம்பரிய கைவினை தொழில் கலைஞர்கள் மற்றும் நுண்கலை தொழிலாளர்களுக்கு சலுகை வழங்கும் விதத்தில் ரூ. 13 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றிய அரசு இணையதளத்தில் கைவினை கலைஞர்கள் மற்றும் நுண்கலை தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு பயன் பெறலாம். தொழில் கருவி வாங்க ரூ. 15 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் குறைந்த வட்டியில் கடன் தொகை ஆகியவை வழங்கப்படும். அதனால் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை சார்ந்த கைவினை கலைஞர்கள் பயன்பெறுவார்கள் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.