சென்னை: தாயாகக் கருணையையும், மனைவியாக உறுதுணையையும், மகளாகப் பேரன்பையும் பொழியும் மகளிர்க்குத் ‘தாயுமானவராகத்’ தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில், நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களைச் செயல்படுத்தி திராவிட மாடலில் தமிழ்நாட்டை தலைநிமிர்த்தி வருகிறோம்! காலை உணவுத் திட்டம் மாணவர்களின் வருகையை உயர்த்தி, கற்றல் திறனை மேம்படுத்துகிறது. இப்போது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தால் உழைக்கும் மகளிரின் சிரமத்தைச் சற்று போக்கியிருக்கிறோம். தாயாகக் கருணையையும், மனைவியாக உறுதுணையையும், மகளாகப் பேரன்பையும் பொழியும் மகளிர்க்குத் ‘தாயுமானவராகத்’ தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும். இவ்வாறு டிவிட்டரில் கூறியுள்ளார்.