Saturday, May 4, 2024
Home » வைரலோ வைரல்

வைரலோ வைரல்

by Porselvi

அதிர்ச்சியாக வந்த அப்டேட் !

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடையில் அஜித்தின் மருத்துவ சோதனைகள், மற்றும் சிகிச்சைகள் முடிந்து திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பின்போது அஜித் கார் ஓட்டும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டனர் படக்குழு.
அதில் நடிகர் ஆரவ், கைகள் கட்டப்பட்ட நிலையில், தனது அருகே அமர்ந்திருக்க ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும் அஜித் அதிவேகத்தில் காரை ஓட்டு கிறார். வீடியோவின் இறுதியில் கார் நிலை தடுமாறி கவிழ்கிறது. இது விபத்தாக நடந்ததா அல்லது படப்பிடிப்புக்காக உருவாக்கப்பட்ட காட்சியா என்பது குறித்த தகவல்கள் இல்லை. இந்த வீடியோவால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அப்டேட் கேட்டது குற்றமா என புலம்பி வருகிறார்கள்.

லெஹங்காவுடன் லண்டன் உலா!

டிஜிட்டல் மார்கெட்டிங் துறையில் பணியாற்றும் ஸ்பானிஷ் இந்திய மாடலான ஷாரதா என்ற பெண் திருமணப் பெண் போல் லெஹங்கா உடையை அணிந்துகொண்டு லண்டன் மெட்ரோ உட்பட அனைத்து தெருக்களிலும் சுற்றித்திரிந்து வைரலாகிவருகிறார். லெஹெங்காவுக்கென பெயர் போன இந்திய மண்ணிலேயே அந்த உடையை அணிந்துகொண்டு தெருக்களில் செல்ல பெண்கள் தயக்கம் காட்டும் நிலையில் லண்டனில் ஒரு பெண் சென்றிருப்பது ஆச்சர்யம்தான். அங்கிருக்கும் பயணிகள் அனைவரும் வைத்த கண் மாறாமல் பார்க்கின்றனர். பின்னர் அவர் ரயிலில் இருந்து இறங்கி, தெருக்களில் நடக்க ஆரம்பிக்கிறார். சாலையில் நடந்து செல்லும் அனைவருமே ஒரு நிமிடம் அவரைப் பார்த்து திகைப்படைகின்றனர். இந்த வீடியோ தற்போது வரை 43 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

 

You may also like

Leave a Comment

two × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi