சென்னை: விமானம் தாமதம் காரணமாக லண்டன் செல்ல வேண்டிய 600-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவிக்கின்றனர். லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 6 மணி நேரம் தாமதமாக சென்னை வந்து கொண்டிருக்கிறது. லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்துவிட்டு பிறகு காலை 5.35 மணிக்கு மீண்டும் லண்டன் புறப்படும். லண்டனில் இருந்து இன்று சென்னை வர வேண்டிய விமானம் தாமதம் காரணமாக லண்டனுக்கு செல்லும் பயணிகள் தவிக்கின்றனர்.