Monday, May 20, 2024
Home » வைரலோ வைரல்

வைரலோ வைரல்

by Porselvi

எலான் மகனுடன் கராத்தே!

டெஸ்லா மற்றும் எக்ஸ் (டுவிட்டர் இப்போது எக்ஸ்) நிறுவனர் எலான் மஸ்க் தனது மகனுடன் தற்காப்புக் கலை பயிலும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்நிலையில், தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெற்றோர்களுக்கும் அவர் களின் குழந்தைகளுக்கும் இடையிலான இனிமையான தொடர்புகளின் புகைப் படங்கள் பெரும்பாலும் மக்களின் இதயங்களில் ஒரு அன்பான உணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாகவே இருக்கும். அந்த வகையில் டெக் பில்லியனர் எலான் மஸ்க் தனது மகன் எக்ஸ் உடன் விளையாட்டுத்தனமாக தற்காப்புக்கலை கற்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்த எலான் மஸ்க் அதில், “எனது ஸ்பேரிங் பார்ட்னருடன் தற்காப்புக் கலைகளைப் பயிற்சி செய்கிறேன்” என பதிவிட்டிருந்தார். எலான் மஸ்க் மற்றும் கனடா பாடகர் க்ரைம்ஸ் தம்பதியினருக்கு மகனாக கடந்த மே 4, 2020 அன்று பிறந்த லில் எக்ஸ். தன்னுடைய பெயருக்காகவே இணையத்தில் பிரபலமான சிறுவனாகவும், உலகிலேயே செல்வாக்கு மிகுந்த குழந்தைகள் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார்.

வழி கேட்ட தோனி வைரலாகும் வீடியோ!

முன்னாள் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் தோனியின் கிரிக்கெட் மட்டுமின்றி அவருடைய ஒவ்வொரு செயலும் இணையத்தில் வைரல் ஆவது புதிதல்ல. அதிலும் குழந்தைத்தனமாக தீபக்குடன் அவர் வம்பிழுக்கும் வீடியோக்கள், தன் மகளுடன் அவரின் தருணங்கள், யோகி பாபுவுடன் கேக் சாப்பிடும் வீடியோ என எப்போதும் டிரெண்டிங்கில் இருப்பார். அப்படித்தான் சமீபத்தில் ஏதோ ஒரு இடத்தில் இருந்து ஜார்கண்ட் தலைநகரம் ராஞ்சியை அடைய வேண்டிய முன்னாள் கேப்டன் தோனி, வழிப்போக்கர் ஒருவரிடம் மிக சாதாரணமாக வழி கேட்க அவரும், அவருக்குப் பொறுமையாக வழி சொல்ல இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டு இருக்கிறது.

You may also like

Leave a Comment

thirteen + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi