Thursday, May 16, 2024
Home » ஊழல் தடுப்பு விதிகளை மீறிய: வெ.இண்டீஸ் வீரருக்கு 6 ஆண்டு தடை

ஊழல் தடுப்பு விதிகளை மீறிய: வெ.இண்டீஸ் வீரருக்கு 6 ஆண்டு தடை

by Francis

துபாய்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் மார்லன் சாமுவேல்(42). முதல் வரிசை ஆட்டக்காரரான சாமுவேல் 2000 முதல் 2018வரை வெ.இ அணிகளுக்கான டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும் வெ.இ அணி 2012, 2016ம் ஆண்டுகளில் டி20 உலக கோப்பையை வென்ற பைனல்களில், சாமுவேல் ஆட்ட நாயகன் விருது வென்றவர். ஓய்வு பெற்றாலும் பல்வேறு நாடுகளின் உள்ளூர் டி20 தொடர்களில் தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் 2019ம் ஆண்டு அபுதாபியில் நடந்த டி10 கிரிக்கெட் தொடரில் கர்நாடகா டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது அமீரக கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக சாமுவேல் மீது குற்றம் சாட்டப்பட்டது.

விதிகளை மீறி விளையாட்டுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் பரிசு பொருட்கள், பணம், விருந்தோம்பல் என பலன்களை பெற்றதாகவும், இவற்றின் மதிப்பு 750 அமெரிக்க டாலருக்கு அதிகமாக இருந்தால் நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதியை மீறியதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. கூடவே தொடர்ந்து விசாரணயை தாமதப் படுத்தியதாகவும், அப்படி தாமதப்படுத்த ஆவணங்களை மறைத்ததாகவும், விளக்கங்கள் தர தாமதம் செய்ததாகவும் என கூடவே 2 குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டன. இந்த 4 குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரித்த ஐசிசி குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது. கூடவே தண்டனைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் துபாயில் நேற்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) பொது மேலாளர்(மனித வளம் மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு) அலெக்ஸ் மார்ஷல், ‘ சாமுவேல், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடி உள்ளார். பல ஊழல் தடுப்பு பயிற்சி முகாம்களில் பங்கேற்றுள்ளார். எனவே கிரிக்கெட் விதிகள், ஊழல் தடுப்புச் சட்டங்கள், வீரரின் கடமைகள் குறித்து அவருக்கு தெரியும். இப்போது ஓய்வு பெற்றிருந்தாலும், செய்த குற்றங்களுக்காக அவர், அனைத்து வகையாக கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 6ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்றார். ‘இந்த தடை 11-11-23 தேதியில் இருந்து அமலுக்கு வருவதாகவும், 11-11-29வரை அமலில் இருக்கும்’, என்றும் அலெக்ஸ் அறிவித்துள்ளார்.

 

You may also like

Leave a Comment

seventeen − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi