சென்னை: ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘விமானம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் படத்தின் வெளியீட்டு தேதியும், இதற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘விமானம்’ படம் வரும் ஜூன் மாதம் 9ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘விமானம்’ தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இதனை சிவ பிரசாத் யானலா எழுதி இயக்கியிருக்கிறார்.
இதில் சமுத்திரக்கனியுடன் மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், அனுசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேக் கலேபு ஒளிப்பதிவு செய்துள்ளார். சரண் அர்ஜுன் இசையமைத்திருக்கிறார். மார்தன் கே. வெங்கடேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஜே. கே. மூர்த்தி கவனித்திருக்கிறார். வசனத்தை பிரபாகர் எழுத, சினேகன் பாடல்களை எழுதியிருக்கிறார். இந்த திரைப்படத்தை கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் சார்பில் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் கிரண் கோர்ராபாரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.