சென்னை: விஜயகாந்த் மறைவுக்கு குறுஞ்செய்தி மூலம் நடிகர் அஜித்குமார் அனுதாபம் தெரிவித்தார். வெளிநாட்டில் இருப்பதால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை என விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் அஜித் இரங்கல் தெரிவித்துள்ளார். விடாமுயற்சி ஷூட்டிங்கிற்காக அசர்பைஜான் நாட்டில் உள்ள அஜித் குறுஞ்செய்தி மூலம் பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறினார். பிரேமலதா மற்றும் சுதீஷிடம் தொலைபேசியில் நடிகர் அஜித் இரங்கல் தெரிவித்தார். சென்னை தீவுத்திடலில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.