Friday, May 17, 2024
Home » ஒப்பந்த அடிப்படையில் காலிபணியிடங்கள்: தமிழ்நாடு வக்பு வாரியம் அறிவிப்பு

ஒப்பந்த அடிப்படையில் காலிபணியிடங்கள்: தமிழ்நாடு வக்பு வாரியம் அறிவிப்பு

by Neethimaan

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் “QAUMI WAQF BOARD TARAQQIATTI SCHEME” திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வக்பு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் ஒன்றிய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய வக்பு கழகத்தின் மூலம் செயல்பட்டு வரும் “QAUMI WAQF BOARD TARAQQIATTI SCHEME” திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் (1) Assistant Programmer – 3 காலிபணியிடங்கள் 6 மாதங்களுக்கு மட்டும் மாத ஊதியம் ரூ.15,000/-, தகுதி-அங்கீரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினியில் அறிவியல் பட்டம் / பி.சி.ஏ அல்லது அதற்கு சமமான பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் ஏதேனும் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம்.

(2) Zonal Waqf Officer- 1 காலி பணியிடம் 12 மாதங்களுக்கு மாத ஊதியம் ரூ.27,000/- மத்திய அரசு / மாநில அரசு / பொதுத்துறையில் பணி செய்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் அல்லது இதற்கு சமமான நிர்வாக அனுபவம்.

(3) Survey Assistant -2 காலி பணியிடங்கள் – 12 மாதங்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000/- தகுதி-சர்வே அலுவலர்கள், களப்பணியில் அனுபவம் பெற்ற கணக்கெடுப்பு / வருவாய் அல்லது இதற்கு ஏற்ற துறையிலிருந்து ஓய்வு பெற்ற அனுபவமுள்ளவர்களிடமிருந்து 31.05.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்கள் tnwakfboard.tech@gmail.com <mailto:tnwakfboard.tech@gmail.com> என்ற மின்னஞ்சல் மூலம் வரவேற்கப்படுகின்றன இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

nine − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi