சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் பற்றி பல்வேறு தகவல்களை அறிய திருக்கோயில் என்ற செயலி அறிமுகப்படுத்தியுள்ளனர். தல வரலாறு, கட்டண விவரம், திருவிழாக்கள் போன்ற தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் செயலி உள்ளதாக தெரிவித்துள்ளனர். அன்னதானம், கோயில் திருப்பணிகளுக்கு நன்கொடை அளிக்கும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.