சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம் நடப்பு 2023-24 நிதியாண்டில் இதுவரை 10 லட்சம் மோட்டார் சைக்கிள் உற்பத்தியை எட்டி விட்டதாகவும், 10 லட்சமாவது டூவீலர் சுசூகி அக்ஸஸ் எனவும் அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் வி-ஸ்டோர்ம் 800 டிசி என்ற மோட்டார் சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் நடந்த பாரத் மொபிலிடி குளோபல் கண்காட்சியில் இதனை காட்சிப்படுத்தியிருந்தது.