டெல்லி: ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் மாற்றப்பட்ட நிலையில் இணையமைச்சரும் மாற்றபட்டுள்ளார். ஒன்றிய சட்டத்துறை இணையமைச்சராக இருந்த எஸ்.பி.சிங் பாகேல் மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை இணையமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிரண் ரிஜிஜு மாற்றப்பட்ட சில மணி நேரங்களில் இணையமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் மாற்றப்பட்டார்.