Tuesday, April 30, 2024
Home » வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் 8ம் தேதி தமிழகம் வருகிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.!

வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் 8ம் தேதி தமிழகம் வருகிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.!

by Mahaprabhu

வேலூர்: வேலூரில் வரும் 8ம் தேதி நடக்க உள்ள ஒன்றிய அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார். வேலூரை அடுத்த கந்தனேரியில் வருகிற 8ம் தேதி ஒன்றிய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், ஒன்றிய மந்திரிகள் அமித்ஷா, வி.கே.சிங் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள். மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி ஒன்றிய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி கடந்த மாதம் 30ம் தேதி முதல் வருகிற 30ம் தேதி வரை ஒருமாதம் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தும்படி பாஜக தலைமை அக்கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டம் நடத்த தீர்மானித்து முதல் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வருகிற 8ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள். அதைத்தவிர தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

You may also like

Leave a Comment

17 − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi