ராமேஸ்வரம்: இரண்டு நாள் பயணமாக ராமேஸ்வரம் வந்துள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார். அமைச்சருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அமித்ஷா வருகையை முன்னிட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.