டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் புதிதாக ராக்கெட் ஜிடி ஸ்டோர்ம் மற்றும் ராக்கெட் 3 ஆர் ஸ்டோர்ம் வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. ஷோரூம் விலையாக ஸ்டோர்ம் வேரியண்ட் சுமார் ரூ.22.59 லட்சம் எனவும், 3 ஆர் சுமார் ரூ.21.99 லட்சம் னெவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 2458 சிசி, 3 சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 180 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. ராக்கெட் 3 ஸ்டோர்ம் வேரியண்டில் டிஎப்டி ஸ்கிரீன், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், குரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.