Friday, May 17, 2024
Home » தொப்பூர் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு!!

தொப்பூர் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு!!

by Porselvi

சென்னை : தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப்பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம். பாளையம் உள்வட்டம், தருமபுரி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் 24-1-2025 மாலை 5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்தில்

கோயம்புத்தூர், டவுன்ஹால், அசோக் நகரைக் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த திருமதி மஞ்சு (வயது 56) க/பெ. கார்வின் திரு.விமல் (வயது 28) த/பெ.ஜெயபால், திருமதி. அனுஷ்கா (வயது 23) க/பெ. விமல். திருமதி. ஜெனிபர் (வயது 29) க/பெ வினோத் ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர் என்றும், இவ்விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

2 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi