நெல்லை: 7வது டிஎன்பிஎல் டி.20 லீக் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. நெல்லை சங்கர்நகர் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் பைனலுக்கான குவாலிபயர் 2 போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும். இதே மைதானத்தில் நாளை மறுநாள் நடக்கும் பைனலில், நடப்பு சாம்பியன் கோவை கிங்சுடன் பலப்பரீட்சை நடத்தும்.