Wednesday, May 8, 2024
Home » திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

by MuthuKumar

நாகர்கோவில்: நாகர்கோவில் – காவல்கிணறு நான்கு வழிச்சாலையில் திருப்பதிசாரத்தில் டோல்கேட் அமைந்துள்ளது. இங்கு வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது. வருகிற 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி கார், ஜீப், வேன் அல்லது இலகு ரகு வாகனத்துக்கு ஒரு வழி முறை பயணம் செய்ய ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நாளில் திரும்ப பயணம் செய்ய கட்டணம் ரூ.65 ஆகும். கார், ஜீப், வேன் அல்லது இலகு ரக வாகனம் ஒரு மாதத்துக்கு 50 தடவை ஒருவழி முறை பயணம் செய்ய வழங்கப்படும் மாதாந்திர கடவுச்சீட்டு கட்டணம் ரூ.1410 ஆகும்.

இலகு ரக வணிக வாகன வகை, இலகு பொருள் வாகனம் அல்லது மினி பஸ் ஆகியவற்றுக்கு ஒரு முறை வழிப்பயணம் ரூ.70 ஆகும். அதே நாளில் திரும்ப பயணம் செய்வதாக இருந்தால் ரூ.105 ஆகும். இவற்றுக்கான மாதாந்திர பாஸ் ரூ. 2280 ஆகும். பஸ் அல்லது டிரக் (இரு அச்சுகள்) நாள் ஒன்றுக்கு ஒருமுறை பயணிக்க ரூ. 145 கட்டணம் ஆகும். அதே நாளில் திரும்ப வந்தால் ரூ.215 ஆகும், இதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.4,775 ஆகும். 3 அச்சுகள் கொண்ட வணிக வாகனங்கள் நாள் ஒன்றுக்கு ஒருமுறை பயணிக்க ரூ.155 ஆகும். அதே நாளில் திரும்ப ரூ.235 ஆகும். மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.5,210 ஆகும். பல அச்சுகள் கொண்ட கட்டுமான இயந்திரங்கள் அல்லது மண் ஏற்றி செல்லும் வாகனம் அல்லது பல அச்சுகள் கொண்ட வாகனம் ( 4முதல் 6 அச்சுகள்) ஒரு முறை பயணிக்க ரூ.225 கட்டணம் ஆகும்.

அதே நாளில் திரும்ப பயணிக்க ரூ. 335 கட்ணம் ஆகும். மாதாந்திர பாஸ், ரூ.7490 ஆகும். அதிக அளவு கொண்ட வாகனம் ( 7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண்டவை) நாள் ஒன்றுக்கு ஒருமுறை பயணிக்க ரூ.275 ஆகும். அதே நாளில் திரும்ப பயணிக்க ரூ. 410 ஆகும். மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.9,120 ஆகும். வணிக உபயோகம் அல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு 2024 -25 ம் ஆண்டு விதிக்கப்படும் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.340 ஆகும். மாதாந்திர பாஸ் தேவைப்படும் நபர்கள், சுங்கச்சாவடியில் உள்ள அலுவலகத்தை அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாங்குநேரியில் டோல்கேட் அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 60 கி.மீ. தூரம் இல்லாத நிலையில் திருப்பதிசாரத்திலும் டோல்கேட் அமைந்துள்ளது. எனவே திருப்பதிசாரம் டோல்கேட் அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை உள்ள நிலையில், தற்போது திருப்பதிசாரம் டோல்கேட்டில் வாகனங்களுக்கான கட்டண உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

18 − fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi