Wednesday, May 15, 2024
Home » மாடியில் இருந்து தவறி விழுந்த வெல்டர் சாவு

மாடியில் இருந்து தவறி விழுந்த வெல்டர் சாவு

by Dhanush Kumar

பெரம்பூர்: எருக்கஞ்சேரி சூழ்புனல்கரை குலசேகரதாசன் தெருவை சேர்ந்தவர் குபேந்திரன் (45), வெல்டிங் தொழிலாளி. இவர், அதே பகுதியில் உள்ள என்.எஸ்.கே தெருவில் வசிக்கும் இவரது நண்பர் ஜீவா வீட்டை புதுப்பிக்கும் வேலைகளை செய்து வந்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டின் முதல் மாடியில் வெல்டிங் வேலை செய்தபோது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு சிகச்சை பலனின்றி நள்ளிரவில் குபேந்திரன் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

15 − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi