தேனி: தேனி லோயர் கேம்ப்பில் வைக்கப்பட்டுள்ள பவதாரிணி உடலுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணியின் உடல் இன்று தேனி லோயர் கேம்ப் பகுதியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. உடல்நலக் குறைவால் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி (47) கடந்த 25ம் தேதி காலமானார்.