லக்னோ: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு உத்தரபிரதேசத்தில் வரி விலக்கு வழங்கி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அமைச்சர்கள் அனைவரும் திரையரங்கிற்கு சென்று “தி கேரளா ஸ்டோரி” படம் பார்க்கவும் முடிவு செய்துள்ளனர். மேற்கு வங்கத்தில் தடை செய்யப்பட்ட நிலையில் படத்திற்கு உத்தரபிரதேச அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.