சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருத்தணியில் 10 செ.மீ., அரக்கோணம், ஆர்.கே.பேட்டை, வெம்பக்கோட்டையில் தலா 9 செ.மீ. மழை பொழிந்துள்ளது. மாயனூர், கிருஷ்ணராயபுரம், நத்தத்தில் தலா 8 செ.மீ. பதிவாகி உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.