Saturday, May 18, 2024
Home » சன் ஸ்க்ரீன் பயன்பாடு ஒரு முழுமையான கட்டுரை!

சன் ஸ்க்ரீன் பயன்பாடு ஒரு முழுமையான கட்டுரை!

by Porselvi

இனி இந்தியாவைப் பொருத்தமட்டில் ஒவ்வொரு வருடமும் கோடையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும் என்கிறது காலநிலை ஆய்வுக் குழுக்களின் ஆய்வறிக்கைகள். ஆதலால் நாம்தான் நம்மை அதற்கேற்ப பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எப்படி வயித்துக்கு உணவு முக்கியமோ அதே போல் சருமத்திற்கு மிக முக்கியம் சன் ஸ்க்ரீன் என்கிறார் கிளினிக்கல் காஸ்மெட்டாலஜிஸ்ட் எஸ்.ஆர். பூர்ணிமா (BDS, PGDCC, MBA).‘‘இந்தியா மாதிரியான வெப்ப நாடுகள்ல பெண்களைப் பொருத்தவரை வயதுக்கு வந்த உடனேயே சரும பராமரிப்பு ஆரம்பிச்சிடணும். ஆனால் 30 வயதில் கூட எந்த மெனெக்கெடலும் இல்லாமல் நரை முடி எட்டிப் பார்த்தால்தான் நம் சருமம் பத்தின எண்ணமே வருது. அதே போல் ஆண்கள் 18 வயது வந்தது முதல் சருமத்திற்கான பராமாரிப்பு ஆரம்பிச்சிடணும். இதிலே சன் ஸ்க்ரீன் மிக முக்கியமான ஒண்ணு. அதேபோல் ஒவ்வொரு சருமத்திற்கும் அதன் குணத்திற்கேற்ப சன் ஸ்க்ரீன் பயன்பாடு அவசியம்’ என்னும் பூர்ணிமா தொடர்ந்து சன் ஸ்க்ரீன்கள் குறித்து விளக்கினார்.

‘‘சருமத்தைப் பொருத்தவரை மூன்று விதங்கள்தான். அவை வறண்ட சருமம், ஆயில் சருமம், , சென்சிடிவ் சருமம். ஒரு சிலர் சன் ஸ்க்ரீன் போட்டுக்கிட்டா மேற்கொண்டு என் முகம் கருப்பா தெரியுது, எண்ணெய் வடியற மாதிரி இருக்குன்னு சொல்வாங்க. முதல்ல உங்க சருமம் என்ன தன்மை கொண்டதுன்னு புரிஞ்சுக்கிட்டு அதற்கேத்த சன் ஸ்க்ரீன் வாங்கணும். சன் ஸ்க்ரீன்கள் லோஷன், ஸ்டிக்ஸ், பட்டர், பேஸ்ட், ஸ்பிரே, ஜெல், கிரீம், லிக்விட் இப்படி நிறைய வெரைட்டிகள் உண்டு. இதிலே லிக்விட், கிரீம் மாதிரியான சன் ஸ்க்ரீன் ஆயில் சருமம் உள்ளவங்களுக்கு பொருந்தாது. மேற்கொண்டு ஆயில் முகத்திலே உண்டாக்கி பருக்கள் வர வெச்சிடும். அவங்க ஜெல் சன் ஸ்க்ரீன் தேர்வு செய்யணும். அடுத்து வறண்ட சருமமா இருந்தா கிரீம் அல்லது லிக்விட் பயன்படுத்தலாம். அதே போல சிலருக்கு சன் ஸ்க்ரீன் புரொடக்‌ஷன் சருமத்தை ஒரு கவர் மாதிரி பாதுகாக்கறதும் கூட பருக்களை உண்டாக்கும். குறிப்பா வறண்ட சருமம் கொண்டவங்களுக்கே மேற்கொண்டு வறட்சியாக்கி சன் ஸ்கிரீன் பாதுகாக்கறதால் பருக்கள் உண்டாகும். இதைத் தவிர்க்க சன் ஸ்கிரீனுக்கு முன்னாடி மாய்ச்சுரைஸர் பயன்படுத்தலாம். மாய்ச்சுரைஸர் போட்டு அஞ்சு நிமிஷங்கள் கழிச்சுதான் சன்ஸ்கிரீன் போட்டுக்கணும்.

அதே போல் வெளியே கிளம்பறதுக்கு குறைஞ்சது 15 நிமிடங்களுக்கு முன்னாடி சன்ஸ்கிரீன் பயன்பாடு இருக்கணும்’’. என்னும் பூர்ணிமா SPF விபரங்கள் குறித்து பேசினார். SPF (Sun Protection Factor) …சருமத்துக்கான சூரிய ஒளி பாதுகாப்புக்கான அளவீடுதான் SPF. SPF10 துவங்கி அதனுடைய பாதுகாக்கும் தன்மை பொருத்து அதிகரிக்கும். காரிலேயே போயி, ஏசியிலேயே இருப்போருக்கு 10, 15, போதும். ஆனால் அடிப்படையிலேயே இந்தியா மாதிரியான வெப்ப நாடுகள்ல குறைஞ்சது SPF 30 அளவேனும் இருக்கற மாதிரி சன் ஸ்கிரீன் தேர்வு இருக்கணும். ஒருவேளை நீங்க மார்க்கெட்டிங் மாதிரியான வெளியே சுற்றித் திரிகிற வேலையிலே இருந்தா நிச்சயம் SPF 30க்கு மேலே இருக்கற சன் ஸ்க்ரீன் பயன்பாடு அவசியம்’’ சன் ஸ்க்ரீன் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை என்னென்ன தொடர்ந்து பேசினார் பூர்ணிமா. ‘‘‘முதல்ல நம்ம சருமம் என்ன டைப், அடுத்து சென்சிட்டிவ்வா இருந்தா அதற்கான மாய்ச்சுரைசர், போலவே நாம் வெளியில் இருக்கும் நேரம் இது அத்தனையும் பார்த்துதான் சன் ஸ்கிரீன் வாங்கணும். அடுத்து உங்க சருமத்துக்கு என்ன சன் ஸ்கிரீன் நல்லதுன்னு தகுந்த நிபுணர்கள் கிட்ட கேட்டு வாங்கணும். சும்மா கூகுள்ல படிச்சிட்டு, ஆன்லைன்ல ஆர்டர் செய்யக் கூடாது.

குறிப்பா மெடிக்கல் பார்மாக்களில் கிடைக்கும் சன் ஸ்கிரீன்கள்லதான் சன் ஸ்கிரீன் உள்ளடக்க விபரங்கள் முழுமையா இருக்கும். பிராண்டுகளுக்கு அடிமையாகாம பட்ஜெட்டில் நல்ல சன் ஸ்கிரீன் எதுன்னு பார்த்து மெடிக்கல் ஷாப்கள்ல மட்டுமே கிடைக்கற சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்க. இப்போ மழை மற்றும் குளிர்காலம் வெயிலே இல்லையே எனக்கெதுக்கு சன் ஸ்க்ரீன் அப்படின்னு கேட்கக் கூடாது. வீட்டுக்குள்ளேயே இருந்தா கூட மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டர் இப்படி எல்லா எலெக்ட்ரானிக் ஐட்டங்களும் கூட நம்ம சருமத்தை பாதிக்கற கதிர்களையும், வெப்பத்தையும் வெளியிடும். லாக்டவுன் நாட்கள்ல நிறைய பேர் சருமப் பிரச்னைக்கு ஆளானதுக்குக் காரணம் லேப்டாப், டிவி, மொபைல் , கம்யூட்டர் இப்படி அதிக பயன்பாடுதான். வீட்டிலேயே இருந்தாலும் சரி சன் ஸ்கிரீன் அத்தியாவசியம். சன் ஸ்கிரீனுக்கு மேலே கூட நீங்க எந்த மேக்கப்பும் போட்டுக்கலாம். காஸ்மெட்டிக், மேக்கப் ஐட்டங்கள் உண்டாக்குற அலர்ஜிகள்ல இருந்து கூட சன் ஸ்கிரீன் ஒரு மாஸ்க் மாதிரி பாதுகாக்கும்.
– ஷாலினி நியூட்டன்

You may also like

Leave a Comment

5 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi