பெரம்பூர்: மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியை சேர்ந்த குமார் மகன் லோகேஷ் பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வகுப்பில் லோகேஷ் தனது நண்பரிடம் பேசியதாக கூறி, டஸ்டரை எடுத்து அவனது தலையில் ஆசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் மாணவனுக்கு காயம் ஏற்பட்டது. சக ஆசிரியர் ஒருவர் மாணவனுக்கு முதலுதவி அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை பார்த்த லோகேஷின் தாயார் காஞ்சனா உடனடியாக அவனை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர், இதுபற்றி திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.