சென்னை: மலையகத் தமிழர் விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் நான் பங்கேற்க இருந்தேன். ஆனால் இலங்கைச் செல்ல இந்திய வெளியுறவுத்துறை அனுமதிக்கவில்லை. ஒன்றிய அரசு அனுமதி கொடுக்காததால் எனது பயண ஏற்பாட்டை ரத்து செய்து விட்டேன் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். நவ.2-ம் தேதி விழாவுக்கு நவ.1-ம் தேதி இரவு 9.30-க்குப் பிறகே ஒன்றிய அரசு அனுமதி அளித்தது என அமைச்சர் தெரிவித்தார்.