ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டின் பிரசித்திபெற்ற எருது சண்டையின் தொடக்க விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்பெயினின் பாம்ப்லோனா நாட்டில் நடைபெறும் எருது சண்டையை காண உலகம் முழுவதும் இருந்து அங்கு மக்கள் குவிவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு எருது சண்டை தொடங்கியதை குறிக்கும் சான் ஃபெர்மின் எனப்படும் பாரம்பரிய திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாம்ப்லோனா நாட்டில் கூடிய மக்கள் பட்டாசுகளை வெடித்து ஆட்டம், பாட்டத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.