விநாயகர்சதுர்த்தி விழா நெருங்கி வருவதால் பல்வேறு ஊர்களில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 5 ரகங்களில் 6 விதமான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சிக்ஸ்பேக் விநாயகர் சிலை வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இதேபோல் இளைஞர்களை அதிகம் கவரும் வகையில் ஹீரோ பைக்கில் வல்லபகணபதியும், புல்லட் பைக்கில் ஏகாந்தக்கணபதியும் நகரில் வலம் வருவது போன்றும் சிலைகள் விதவிதமாக தயார் செய்யப்பட்டுள்ளது.