Wednesday, May 15, 2024
Home » வெள்ளி விழாவில் 700 ஊழியர்கள் மத்தியில் சாகச வரவேற்பில் விபத்து ஐடி நிறுவன சிஇஓ பலி: ராமோஜி பிலிம் சிட்டியில் பரபரப்பு

வெள்ளி விழாவில் 700 ஊழியர்கள் மத்தியில் சாகச வரவேற்பில் விபத்து ஐடி நிறுவன சிஇஓ பலி: ராமோஜி பிலிம் சிட்டியில் பரபரப்பு

by Karthik Yash

ஐதராபாத்: ஐதராபாத்தில் உள்ள பிரபலமான ராமோஜி பிலிம் சிட்டியில் விஸ்டெக் எனும் பன்னாட்டு ஐடி நிறுவனம் தனது வெள்ளி விழா கொண்டாட்டத்தை கடந்த 18ம் தேதி கொண்டாடியது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம் இந்தியாவில் 20 அலுவலகங்களை கொண்டுள்ளது. வெள்ளி விழாவில்700 ஊழியர்கள் கூடியிருந்தனர். அப்போது நிறுவனத்தின் நிறுவனரும் சிஇஓவுமான சஞ்சய் ஷா (56), நிறுவன தலைவர் விஸ்வநாத் ராஜு (52) ஆகியோருக்கு வித்தியாசமாக வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இருவரும் இரும்பு கூண்டு மூலம் மேலே இருந்து விழா மேடைக்கு இறக்கப்பட்டனர். அப்போது திடீரென கூண்டை தாங்கியிருந்த இரும்பு சங்கிலி உடைந்து, இருவரும் கான்கிரீட் தள மேடையில் விழுந்து படுகாயமடைந்தனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிஇஓ சஞ்சய் ஷா சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். நிறுவனர் விஸ்வநாத் ராஜு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராமோஜி பிலிம் சிட்டியில் எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை எனவும், ஆம்புலன்ஸ் அழைத்து வர தாமதித்தாகவும் ஐடி நிறுவனம் போலீசில் புகார் அளித்துள்ளது.

You may also like

Leave a Comment

five × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi