* கேலோ இந்தியா தொடரில் வேளச்சேரி நீச்சல் குள வளாகத்தில் நேற்று நடந்த ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் சப்-ஜூபியர் கலைநய மகளிர் பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை ஓசன்னா ரீனா தாமஸ் (14 வயது) தங்கம் வென்று அசத்தினார். மற்றொரு பிரிவில் வெண்கலம் வென்றார்.
* ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய மகாராஷ்டிரா அணி நேற்று மட்டும் 4 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை அள்ளியது.
* பிஆர் ஆதித்தன் நினைவு ஐடிஎப் ஆண்கள் டென்னிஸ் போட்டி சென்னையில் நாளை தொடங்கி ஜன. 28 வரை நடைபெற உள்ளது. அடையாறு காந்திநகர் கிளப்பில் நடைபெறும் இந்தப் போட்டியில் 15 நாடுகளை சேர்ந்த வீரர்கள் விளையாட உள்ளனர். மொத்த பரிசுத் தொகை: ரூ.21 லட்சம்.
* ஐசிசி யு-19 உலக கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் நேற்று மோதிய இந்தியா யு-19 அணி 84 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
* இந்தியா 50 ஓவரில் 251/7 (ஆதர்ஷ் 76, கேப்டன் உதய் 64); வங்கதேசம் 45.5 ஓவரில் 167 ரன் ஆல் அவுட் (ஆரிபுல் 41, முகமது ஜேம்ஸ் 54).