* உலக கோப்பைக்கான அணியில் தான் இடம் பெறததால், அயர்லாந்துக்கு எதிரான தொடரில் விளையாட இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் மறுத்து விட்டார். அதனால் அவருக்கு பதிலா கோஹ்லர் காட்மோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
* சர்வதேச சிறந்த வீரர்களுக்கான 2022-23ம் ஆண்டுக்கான பிஃபா பரிந்துரைப் பட்டியலில் மெஸ்ஸி, எம்பாபே, எர்லிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
* மெக்சிகோவின் குவாடலஜாரா நகரில் நடைபெறும் மகளிர் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபர்(7வது ரேங்க்) 7-6(6-4), 5-7, 3-6 என்ற புள்ளிக் கணக்கில் இத்தாலி வீராங்கனை மார்டினா டிரெவிசன்(54வது ரேங்க்) இடம் தோற்று வெளியேறினார்.
* தென் ஆப்ரிக்காவின் முக்கிய வீரர்கள் அன்ரிச் , மங்கலா ஆகியோர் காயம் காரணமாக உலக கோப்பைக்கான அணியில் இருந்து விலகி உள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஆண்டில், லிசாட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அன்ரிச் 2019ம் ஆண்டு உலக கோப்பையின் போதும் காயம் காரணமாக அணியில் இருந்து விலக நேரிட்டது.