மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு செப்.8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் தற்போதையை நிலை குறித்து மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2020ல் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் விசாரணையின்போது போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ரகுகணேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதில், உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை 3 மாதத்தில் முடிவடையும் என்றும் தற்போதுதான் நீதிபதி நியமிக்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தரப்பு தெரிவித்தது.