மும்பை: என்.சி.பி. மும்பை மண்டல முன்னாள் அதிகாரி சமீர் வான்கடேவை ஜூன் 23 வரை கைது செய்ய தடை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஷாருக்கானின் மகனை கைது செய்யாமல் இருக்க சமீர்வான்கடே ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. சிபிஐ வழக்கை ரத்து செய்யக் கோரி சமீர் வான்கடே தொடர்ந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.